Monday, April 07, 2008

வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடக மக்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

(நாகராஜுக்கு அதுபற்றி உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டே பேசினார்). ??அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம் என்றே எங்களுக்குத் தெரியாது. உயிரைக் கொடுத்தாவது அந்தத் திட்டத்தைத் தடுப்போம். எங்களிடம் (கர்நாடக அரசிடம்) கேட்காமல் எப்படி அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது? அது எல்லாமே கர்நாடக இடம்தான். எங்களிடம் அனுமதி பெற்றுத்தான் அங்கே கையை வைக்க வேண்டும்.??

எது உங்கள் இடம் என்கிறீர்கள்? ஒகேனக்கல் பகுதி, தமிழக எல்லைக்குள்தானே வருகிறது?

??அதெப்படிச் சொல்வீர்கள்? தமிழகத்தில் உள்ள தலைவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜம் என்ன தெரியுமா? கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம் எல்லாமே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதுதான். எல்லாவற்றையும் தமிழர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் கைவைப்பது எவ்வளவு பெரிய தப்பு என்று தமிழ்நாட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் இத்தனை எதிர்ப்பைக் காட்டுகிறோம்.??

அதற்காக தமிழகத் தலைவர்களின் படத்தை எரிப்பதும், திரையரங்குகளைச் சேதப்படுத்துவதும் சரியானதா?

??என்ன செய்யச் சொல்கிறீர்கள்? கன்னட மொழிப் பற்றாளர்கள் அவர்கள். எங்களைப் போல அவர்கள் பாணியில் போராட்டங்களைச் செய்கின்றனர். அதெல்லாம் வேண்டாம் என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எங்கள் மண் மீது கண் வைக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.??

கர்நாடக மாநில எல்லையைக் கடந்து, நீர் அளவை நிலையத்தைத் தாண்டி அதற்கு அப்பால்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான இடத்தையே குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும் போது கர்நாடக மக்களுக்கு எப்படி தண்ணீர் பிரச்னை வரும்?

??அதுதான் ஏற்கெனவே சொன்னேனே. புரியவில்லையா உங்களுக்கு? கிருஷ்ணகிரி வரைக்கும் கர்நாடக மாநிலம்தான் என்கிறபோது, தமிழக அரசு தேர்வு செய்துள்ள இடமும், கர்நாடக அரசுக்குச் சொந்தமானதுதானே? நீங்கள் ஒகேனக்கல்லை மறந்து விடுங்கள். நாங்கள் போராட்டத்தை மறந்து விடுகிறோம்.??

கேபிள் ஆபரேட்டர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளீர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதே?

??தமிழ் சேனல்களை மட்டும் ஒளிபரப்பக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்களும் கூட்டம் போட்டு, உண்ணாவிரத தினத்தில் மட்டும் ஒளிபரப்பைத் தடை செய்து, மற்ற நாட்களில் கலைஞர் சேனலைத் தவிர மற்ற தமிழ் சேனல்களை ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்னை தீர்கிறவரை கர்நாடகாவில் கலைஞர் தொலைக்காட்சியை அவர்கள் காட்ட மாட்டார்கள், காட்டவும் முடியாது.??

எதற்காக அந்தக் குறிப்பிட்ட சேனல் மீது இவ்வளவு கோபம்?

??ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்தவர் கருணாநிதி. அவருடைய சேனல்தானே அது? அதில் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவாக செய்தியைப் பரப்பி விடுவார்கள். அதனால்தான் அந்தக் குறிப்பிட்ட சேனலை மட்டும் பிரச்னை தீர்கிறவரை ஒளிபரப்பக்கூடாது என்கிறோம். அதேபோல், கருணாநிதியின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மத்திய அரசை மிரட்டியே பணிய வைக்கிறார். மத்திய அரசை தனது சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறார். கருணாநிதியை நாடு கடத்த வேண்டும். மத்திய அரசை ஏமாற்றி தமிழகத்துக்குச் சாதகமான எல்லாவற்றையும் வாங்கிவிடுகிறார். அப்படித்தான் மத்திய அரசிடம் ஒகேனக்கல் திட்டத்திலும் ஏமாற்றியிருக்கிறார். இந்தத் திட்டத்தினால் பெங்களூரு மக்களுக்கு தண்ணீர்ப் பிரச்னை வந்துவிடும். அதை கருணாநிதி மூடி மறைத்து விட்டார். கேபிள் ஆபரேட்டர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.??

ஒகேனக்கல் நீரை தமிழக அரசு குடிநீர்த் திட்டத்துக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே பெங்களூரு ஒப்பந்தத்தில் கர்நாடக அரசு கையப்பமிட்டிருக்கிறதே?

??அது பத்து வருடத்துக்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தம். பெங்களூரு குடிநீர்த் திட்டம் என்று ஒன்று வந்த போது, அப்போது தமிழக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, மத்திய அரசு அதில் தலையிட்டு, ?காவிரிக்குக் குறுக்கே பெங்களூரு குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம். அதே வேளையில் ஒகேனக்கல்லில் இருந்து தமிழகம் குடிநீருக்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. அதை நான் மறக்கவில்லை. அப்போது மத்திய அரசு முன்னின்று பஞ்சாயத்துச் செய்து வைத்தது. ஆனால், கருணாநிதி தன்னுடைய செல்வாக்கை வைத்துக்கொண்டு கர்நாடகத்திடம் மத்திய அரசு கருத்துக் கூட கேட்டுவிடாமல் தடுத்து, அவர் நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார். அது நியாயமா? அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்கிறேன். அதுதான் சரியானது!?? என்று அனல் பறக்க தனது பேட்டியை முடித்துக? கொண்டார் வாட்டாள்

நன்றி :குமுதம் ரிப்போட்டர்

15 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :)

said...

என்னால் முயல...........:-)

நா. கணேசன் said...

வாட்டாள் நாகராஜ் நடிகர் ராஜ்குமார் (= கோபி முத்துகுமார்) போல தமிழ்நாட்டில் பிறந்தவர். திருப்பூர் வரை கர்நாடகம் என்கிறார் :-)

குமுதச் செய்தி தந்தமைக்கு நன்றி.

நா. கணேசன்

We The People said...

இதுக்கு முன்னாடி இதே மாதிரி ஒர் அருமையான காமெடி பேட்டியை பார்த்திருக்கேன், என்ன வித்தியாசம் என்றால் அது ஒரு எஸ்.வி.சேகர் நாடகத்தில் வந்தது! (ஆயிரம் உதை வாங்கிய அபூர்வசிகாமணி).. அதைவிடவும் இது நல்ல காமெடியா இருக்கு!!!

ஏங்க இந்த பேட்டி எடுக்கறவரு எப்படி சிரிப்பை அடக்கிட்டு இருந்திருப்பாரு?? அதுக்கு எதாவது மருந்து இருக்குமோ??

மலையாளத்தில் வட்டாள்(வட்டு+ஆள்) என்றால் என்றாலே முட்டாள் என்று தான் அர்த்தம் ... இவனை எல்லாம் என்ன செய்ய... விஜய் டி.வி ஆள் இந்தியா லெவலில் காமெடி கிங் பட்டத்துக்கு ஏன் நம்ம இவரை சிபாரிசு செய்யக்கூடாது??

Tech Shankar said...



Missing Photos for Vattal Nagaraj.
You can see here.

Hariharan # 03985177737685368452 said...

சந்தன வீரப்பனை ராஜ்குமாரை/ கர்நாடக அரசியல்வாதியைக் கடத்திய சமயங்களில் தமிழ் இனப்போராளின்னு நம்மூர்ல ஒரு தமிழ் இனமான மீட்புப்படை குரூப் செய்த பைத்தியக்காரத்தை மிஞ்சும் சரியான மெண்டல் கேசு இந்த வாட்டாள் நாகராஜ்!


ஒகேனேக்கல் குடிநீர் திட்டத்திற்கு எந்த வித அனுமதி தேவையும் இல்லாத நிலையில், திரா"விட" முன்னேற்ற கழகத்தில் முகவீட்டு வாரிசுகள் தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகளில் பதவி /அதிகாரம் பெற்றுத் தொடர வேண்டிய ஒரே தேவையை மட்டுமே மனதில் வைத்து "எங்கள் எலும்புகளை உடைத்தாலும்" ஒகேனேக்கல் திட்டம் நிறைவேற்றியே தீருவோம் என்று கோவண சைஸ் மேம்பாலத்தை திறக்கும் போது கருணாநிதி சூளுரைக்க வேண்டிய அவசியம் என்னவோ??

மொழிவாரி அரசியல் வரும் காலங்களில் இன்னும் இனவெறியாக்கி எத்தனை கீழாகச் செல்லமுடியும் என்பதற்கு இது ஒரு முன்னோட்டம்!

said...

Hello Bala

You are used Tamil fonts is not read easy and that letter look linke kanada letters so plz change as usual fonts.

yours
siva
Pondicherry.

enRenRum-anbudan.BALA said...

அனானி,
//என்னால் முயல...........:-)//
என்னாலயும் முயலாமத் தான், இப்பதிவு ;)

enRenRum-anbudan.BALA said...

கணேசன் ஐயா,
//திருப்பூர் வரை கர்நாடகம் என்கிறார் :-)
//
உங்க ஊருக்கு (பொள்ளாச்சிக்கு) ஆபத்து ஒண்ணுமில்லயே :)))

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

ஜெய்,
இந்த "வட்டு ஆள்" பண்ற காமெடிக்கு, நம்ம சேகர், கிரேசி மோகன் எல்லாம் பிச்சை வாங்கணும்
:)
//ஏங்க இந்த பேட்டி எடுக்கறவரு எப்படி சிரிப்பை அடக்கிட்டு இருந்திருப்பாரு?? அதுக்கு எதாவது
மருந்து இருக்குமோ??
//
பேட்டி எடுத்தவர் திரும்பி நின்று பேட்டி எடுத்திருப்பாரோ ? ;-)

enRenRum-anbudan.BALA said...

தமிழ் நெஞ்சம்,
தகவலுக்கு நன்றி.


சிவா,
I have changed the Fonts, Hope you are able to read now.

enRenRum-anbudan.BALA said...

ஹரிஹரன்,
வாங்க, நமது முதல்வரின் காட்டமான பேச்சு அனாவசியமாக பிரச்சினையை பெரிதாக்கி விட்டது.
இனிமேல் சுமுகமான தீர்வு என்பது கஷ்டம் தான் :( மேலும், கடந்த 10 ஆண்டுகளாக
இத்திட்டத்தை உடைப்பில் போட்ட திமுக/அதிமுக கட்சிகள் கண்டனத்துக்குரியவை ! முன்னமே
செய்திருந்தால், குறைந்த செலவில் திட்டத்தை (தற்போதைய மதிப்பீடு 1334 கோடிகள்)
நிறைவேற்றியிருக்கலாம் இல்லையா ?

எ.அ.பாலா

said...

சூப்பர் கன்னட மங்குணி இந்த வாட்டாள் நாகராஜ்... சூரதேங்காய் பொறுக்க கூட லாயக்கு இல்லை.... பொதுவாகவே இந்த கன்னட அமைப்பு ஆட்கள் எல்லோரும் ஐந்து அறிவு ஜீவன்கள் தான்....நாகராஜூ மட்டும் என்ன விதி விலக்கா ?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தமிழ்நாடே கர்நாடகமாநிலத்தின் ஒரு பகுதியே எனச் சொல்வதற்கு;;இவர் ஏன் இப்படி சின்னச் சின்ன ஊராகக் கூறுகிறார்.

enRenRum-anbudan.BALA said...

சங்கு மாமா, யோகன் பாரிஸ்,

வாசிப்புக்கும், கருத்துக்கும் நன்றி.

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails